Monday 21 August 2017

முதலமைச்சரை மாற்றக்கோரும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு: முதலமைச்சரை மாற்றக்கோரி கடிதம் அளித்தனர்

சென்னை:

அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 



அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விழா நடந்த அதே சமயத்தில் டி.டி.வி.தினகரன் வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் ஆளுநரை இன்று காலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆளுநரை சந்திப்பதற்கு முன்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால், இணைப்புக்கு பின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது.இந்நிலையில், காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிகிறது. அப்போது ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் கென்னடி, முதலமைச்சர் பழனிசாமி சரிவர செயல்படாததால், அவரை மாற்ற ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார். அதேபோல், முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறுகையில், ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எங்கள் பலம் இன்று தெரியவரும் என்று கூறினார்.இதற்கிடையே, பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்திப்பதற்காக கவர்னர் மாளிகைக்குள் சென்றார்.



Thursday 10 August 2017

முதலமைச்சர் மீதும் நடவடிக்கை - தினகரன் ஆவேசம்

Image result for தினகரன் images

தீர்மானத்தில் அதிமுக எனக் குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. அதிமுக பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது . அதிமுக அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது தவறானது.  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் இதில் கையெழுத்திட்டவர்கள் பதவி இழக்க நேரிடும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் பயந்து போய் உள்ளனர்
பொருளாளராக நியமிக்கபட்ட சீனிவாசன் தனது ஊதியத்தை பெற்று உள்ளார். நியமித்த திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்படும்போது, நான் ஏன் துணை பொதுச்செயலாளராக செயல்படக்கூடாதுஜெயலலிதா இருந்த போதும்  இது போல் நியமன பதவிகள் நியமிக்கபட்டு இருக்கின்றன. துணைபொதுச்செயலாளராக செயல்பட என்னை கட்சியின் சட்டதிட்டங்கள் அனுமதிக்கின்றன.  புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும்  நீக்கவும் அதிகாரம் உள்ளது.கட்சி சட்டவிதிகளின்படி உள்ள அதிகாரத்தின் பேரிலேயே புதிய பொறுப்பாளர்களை நியமித்தேன்.கட்சி சட்டவிதிகளின்படி புதிய பொறுப்பாளர்களை நியமிக்க எனக்கு அதிகாரம் உள்ளது
அனைவரும் கையெழுத்திட்டு தான் பொதுச் செயலாளரை தேர்ந்து எடுத்தார்கள். சசிகலா கூறியதால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.பதவியை காத்து கொள்ளவும்  பயம் காரணமாகவும் சிலர் குழப்பம் விளைவித்தால் கட்சி பாதிக்காது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்யப்படும். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் முதலமைச்சர் உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் . என்னை செயல்படவிடாமல் தடுக்க சசிகலாவால் மட்டுமே முடியும். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. கட்சியை பலப்படுத்த நான் நினைத்தால் அமைச்சர்கள் பதவிக்காக பயப்படுகிறார்கள். சசிகலா நியமனத்தை ஆதரித்து தற்போது மறுக்கும் 420க்களுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.  மடியில் கனம் இருப்பதால் சில அமைச்சர்கள் என்னை விலக்க திட்டமிட்டு உள்ளனர். பதவியில் இருக்கிற வரை  சுருட்டிக்கொண்டு செல்வதில் தீர்க்கமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியை உருவாக்கியவர்கள் சசிகலா அவர்கள்.  தவறான நடவடிக்கையால் சுய நலத்தால் இந்த ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்ற நல்ல எண்ணம் எனக்கு உள்ளது. யார் நல்லவர்கள் யார் நன்றி மறந்தவர்கள் என தொண்டர்களுக்கு தெரியும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


Wednesday 9 August 2017

மோடி தலைமையில் அ.தி.மு.க., அணிகள் இணைப்பு?

அதிமுக, அணிகள் இணைப்பு, மோடி, ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, மைத்ரேயன், ஜெயலலிதா, நிர்வாகிகள்,செம்மலை, மாபா.பாண்டியராஜன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் சகாக்கள் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களை, தலைமைக் கழகம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைப்பதுதான்.நாளை டில்லியில் துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவி ஏற்கிறார். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக, இன்று மாலை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்கிறார். அதே போல, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் டில்லி செல்கிறார்.டில்லியில் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும், அப்போது, இணைப்பு குறித்து இரு தரப்பிலும் பேசி அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் பரவி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாவது:அதிமுக பிளவுபட்ட பிறகு, இரண்டு தரப்பிலும், இணைப்புக் குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்தே வந்தன. இதற்கிடையில், கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன், தன்னிச்சையாக நிர்வாகிகளை நியமித்து குழப்பம் விளைவிக்க, பழனிச்சாமி தரப்பு, கோபம் அடைந்தது. அதுவரை, கொஞ்சம் மந்தமாக இருந்த தங்கள் செயல்பாடுகளை இணைப்பு நோக்கி வேகப்படுத்தியது.ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழக முதல்வராக பழனிச்சாமி தொடருவார். கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரவைக்குள் வந்து, துணை முதல்வராவார். பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் பாண்டியராஜனும், செம்மலையும் புதிய அமைச்சர்களாவர். கட்சியின் அவைத் தலைவராக மதுசூதனனும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் இருப்பர்.இரு அணிகளும் இணைக்கப்பட்ட பின், அந்தத் தகவலை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவித்து, முடக்கப்பட்ட அ.தி.மு.க., பெயரை மீட்டெடுப்பதோடு, இரட்டை இலை சின்னத்தையும் கோரிப் பெறுவர். இதற்காக, செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும், இரண்டு தரப்பிலும் செய்யப்படும்.இணைப்புக்குப் பின், பொதுக் குழுவைக் கூட்டி, கட்சிக்கான தேர்தலை நடத்தி, பொதுச் செயலராக பன்னீர்செல்வத்தைத் தேர்வு செய்வர். பின், கட்சியின் மற்ற நிர்வாகிகளை, பன்னீர்செல்வம் நியமிப்பார்.அதன்பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை களைய, தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்படும்; கட்சியில் இருந்து, சசிகலா, தினகரன் தரப்பினர் அனைவரும் முழுமையாக நீக்கி வைத்தும் உத்தரவிடப்படும்.வரும், ஆக.15க்குப் பின், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அதற்கு முன்னதாக, ஒன்றுபட்ட அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அ.தி.மு.க., சார்பில், இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தையில், பழனிச்சாமி தரப்பில் இருந்து துணை சபாநாயகர் தம்பிதுரையும், பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து மைத்ரேயன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், இந்த இருவர் மாறி வேறு யாரும் வரக் கூடும். அமைச்சரவை விரிவாக்கத்தில், பா.ஜ., தரப்பில் அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் அமித் ஷாவோடு, அ.தி.மு.க., சார்பிலானவர்களும் பதவி ஏற்பர்.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.



மெரீனா கடற்கரை ரூ.28 கோடியில் சீரமைப்பு

மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சீரமைப்பு

சென்னை மெரீனா கடற்கரை உலகிலேயே மிகவும் நீளமான மணல் பரப்புமிக்க கடற்கரை என்ற பெயரை பெற்றுள்ளது.சென்னை மாநகர பொதுமக்கள் பொழுது போக்குவதற்கும், காற்று வாங்குவதற்கும், நடைபயிற்சி செய்வதற்கும் இந்த கடற்கரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த கடற்கரையின் அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் மெரீனா கடற்கரையில் பொது மக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு பணிக்காக 75 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், குப்பை தொட்டிகள், மருத்துவ முதலுதவிகள், மேற்கூரை இருக்கைகள், மீட்பு படகுகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.இதேபோல் எலியட்ஸ் கடற்கரையிலும் 26 சி.சி. டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பணிகளுக்காக ரூ. 28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. கேமிராக்கள் அனைத்தும் தமிழக கடலோர பாதுகாப்பு படை மூலம் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.குளிக்கும் போது கடலில் தவறி விழுந்து மூழ்குவோரை உடனடியாக காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் செய்யப்படுகிறது. கடற்கரை பகுதியில் தடுப்பு கயிறுகள் கட்டப்பட உள்ளது.கடலில் மூழ்கி தவிப்போரை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்யப்படுகிறது.இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-சென்னை மெரீனா, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளை நவீன முறையில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், பொது மக்கள் பாதுகாப்புக்காக 100 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்படுகிறது. தமிழக கடலோர பாதுகாப்பு படை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இதன் மூலம் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள்.


தொண்டர்கள் சூழ்ச்சியை முறியடிப்பார்கள் - எடப்பாடி

தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்- அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நடந்தது.விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். பிரதமர் இந்திராகாந்தி, மொரார்ஜிதேசாய், சரண்சிங் ஆகியோரை ஆதரித்தார். அப்போது எம்.ஜி.ஆரை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இது பற்றி பத்திரிகையாளர்கள் எம்.ஜி.ஆரிடம் கேட்டனர்.அதற்கு எம்.ஜி.ஆர்., நான் இப்போது தனிப்பட்ட நபர் அல்ல. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர். மக்களின் நலன்தான் எனக்கு முக்கியம். மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணக்கமான சூழலை கடைபிடிக்கின்றேன். எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.அந்தவகையில் எம்.ஜி.ஆரின் மனிதநேயமிக்க வழியைத்தான், அம்மாவின் வழியில் வந்த அம்மாவின் அரசும் கடைபிடிக்கிறது.நாட்டில் தேர்தல் நடத்துவதுபோல் காட்டிலும் விலங்குகளுக்கு யார் தலைவன் என தேர்தல் நடந்தது. பொதுவாக காட்டுக்கு சிங்கம்தான் தலைவனாக இருக்கும். ஆனால் புலி, தலைவன் பதவியை அடைய பல சூழ்ச்சிகளை கையாண்டது. அதற்காக நரியை அழைத்த புலி, நான் சிங்கம் கறியை ருசித்தது இல்லை. சிங்கத்தின் கறியை நீ எடுத்து வந்தால் நான் தலைவன் ஆகிவிடுவேன், நீதான் காட்டுக்கு ராஜா என்று புலி ஆசை கூறியது.அதை நம்பி நரி, யானையிடம் சென்று நீ பலசாலி, சிங்கத்தை எதிர்த்து தேர்தலில் நின்றால் நீதான் வெற்றிபெறுவாய் என்று கூறியது. மேலும் அந்த நரி, சிங்கத்திடம் சென்று உன்னை எதிர்த்து யானை தேர்தலில் நிற்கிறது என்று கூறியது. இதை கேட்ட சிங்கம், யானையை வரவழைத்து நடந்த விவரத்தை கேட்டது. அதற்கு யானை, நான் தேர்தலில் நிற்பது பற்றி சொல்லவில்லையே என்றது. நரியின் சூழ்ச்சியை தெரிந்து கொண்ட சிங்கம், காக்கையை அழைத்து நரிக்கு பரிசு வைத்திருப்பதாகவும், அதனை அழைத்து வருமாறும் கூறியது. அதன்படி பரிசு பெறுவதற்காக நரி ஓடி வந்தது. அப்போது சிங்கமும், யானையும் ஒன்றாக சகஜமாக இருந்ததை கண்டு நரி அச்சத்துடன் சென்றது. கடைசியில் புலி மற்றும் நரியின் சூழ்ச்சி பலிக்கவில்லை.
காட்டில் பல சூழ்ச்சிகள் நடைபெற்றதுபோல், நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கிறார்கள். ஒருபோதும் அவர்களது சூழ்ச்சி வெற்றிபெறாது. மற்றவர்கள் செய்யும் குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள்.


தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழ்நாட்டில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீங்கள் மேட்டூர் அணையை தவிர வேறு அணை எதுவும் கட்டிக்கொள்ள முடியாதா?” என்று கேள்விகள் எழுப்பினார்.அதற்கு சேகர் நாப்டே, கர்நாடகம் மேடான பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அதிக அளவில் தண்ணீரை எளிதாக சேமித்து வைக்க முடியும் என்றும், தமிழ்நாடு சமதளத்தில் இருப்பதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது என்றும் கூறினார்.என்றாலும், “தமிழ்நாட்டில் தண்ணீரை தேக்கி வைக்க வேறு வழியை நீங்கள் முயற்சிக்கவில்லையா?” என்று நீதிபதி கேட்டார்.அதற்கு சேகர் நாப்டே, “ஏற்கனவே கூறியது போல தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தட்டையானது என்பதால் தண்ணீரை நிறுத்தி தேக்கி வைப்பது கடினம் என்றும், மேட்டூரில் அளவுடன்தான் தேக்கி வைக்கமுடியும் என்றும், தமிழ்நாட்டுக்கு பாதகமாக அமைந்த இந்த அம்சத்தை காவிரி நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என்றும் தெரிவித்தார்.அப்போது பாலி நாரிமன் குறுக்கிட்டு, “மேகதாது தமிழ்நாட்டின் எல்லையில்தான் உள்ளது. அங்கு ஒரு அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று கூறினார்.
அதற்கு தமிழக அரசு வக்கீல் ஜி.உமாபதி, “மேகதாது நீர்மின்சார திட்டத்தின் வரைவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அதனால்தான் தமிழ்நாடு ஆட்சேபம் தெரிவிக்கிறது” என்றார்.அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதிகள், “இந்த வழக்கில் நாங்கள் தீர்ப்பு வழங்கும் போது தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்தும் வகையில் ஒழுங்காற்று அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவோம். இல்லையென்றால் நீங்கள் இரு மாநிலங்களும் நீர்ப்பங்கீட்டுக்காக சண்டையிட்டுக்கொண்டே இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.அத்துடன், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த பிறகு, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் தலா ஒரு நிபுணரை நியமித்து அவர்கள் மூலம் தங்கள் தரப்பிலான தொழில்நுட்ப விவரங்களை விவரமாக கோர்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்கிராம மக்கள் அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 31-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் சந்தித்து பேசினார். அப்போது கதிராமங்கலம் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும். உங்களுக்குஆதரவு தெரிவிக்க வருகிற 16-ந் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வருகை தர உள்ளார் என்றார்.அதே போல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்டு லெனினிஸ்ட்) மாவட்ட தலைவர் கண்ணையன் கலந்து கொண்டு பேசும் போது, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்கும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இங்கு பிரசாரம் செய்தோம்.அப்போது எங்களை விரட்டி அடித்தீர்கள். இன்று நாங்கள் கூறியது போல் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. உங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருந்து விவசாயத்தையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம் என்றார்.போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கூறியதாவது:-மதுரை ஐகோர்ட்டில் தர்மராஜன், ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்காமல் காலதாமதம் ஆவதற்கு தர்மராஜன் பெயரை தர்மதுரை என்றும் ரமேஷ் பெயரை ராஜேஷ் என்றும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் எழுதி உள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்களிடம் கேட்டு பெயரை சரியாக எழுதி இருக்கலாம். அவசர, அவசரமாக பொய் வழக்கு போட்டதால் தான் பெயரை தவறாக எழுதி உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இத்தகைய தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்கிறோம். எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும்.


முரசொலி பவள விழா தொடங்கியது

காட்சி அரங்கம் திறப்பு: முரசொலி பவள விழா தொடங்கியது


தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ பத்திரிகை தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக திகழ்கிறது.முரசொலி தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதால் பவள விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார்.தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முரசொலி செல்வம், மு.க.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடக்கிறது. முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்புரை ஆற்றுகிறார். பத்திரிகையாளர்கள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். முரசொலி நிர்வாக மேலாண் இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறுகிறார்.நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு பவள விழா மலரை வெளியிட முரசொலி மேலாளர் சி.டி. தட்சிணாமூர்த்தி பெற்றுக் கொள்கிறார்.தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகதலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.


அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணைகிறதா?

இரு அணிகளும் விரைவில் இணைகிறதா? - அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் தீவிர ஆலோசனை

அ.தி.மு.க மூன்று அணிகளான உடைந்த பின்னர் இன்று காலை அ.தி.மு.க தலைமையகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென வருகை தந்தார். அவருடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்துள்ளனர். இரு அணிகளும் இணைப்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரு அணிகளும் இணையும் பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், அவரது அணியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்க முதல்வர் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் இரு அணிகளும் இணைந்தால் தான் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முடியும் என்பதை சில நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களது தரப்பு நிபந்தனைகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்வார்கள் என்று கூறப்படுகிறது.நீண்ட நாட்களாக அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக எந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளும் நடக்காத நிலையில் இன்று கூடியுள்ள கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால், மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.



எடப்பாடி பழனிசாமியுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு

Image result for sarath kumar images


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து பேசினார்இதற்காக இன்று காலை சரத்குமார் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். பின்னர் எடப்பாடி பழனி சாமியை சரத்குமார் சந்தித்து பேசினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-மரியாதை நிமித்தமாகவே முதலமைச்சரை சந்தித்தேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அனைவரும் அரசியலுக்கு வர வேண்டுமென நினைக்கிறேன். நடிகர் சங்கத்திற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. பெண்கள் மீது தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்ற நடிகர் விஜய் -ன் கருத்தை வரவேற்கிறேன்.


தண்ணீர் சிறுவன் தொட்டியில் பிணம் - நரபலியா?




வாணியம்பாடியை அடுத்த மேல்நிம்மியம் பட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஹரிகேஷ் என்ற துளசி (2). சித்தப்பா வீட்டில் வளர்ந்து வந்தான்.
அந்த பகுதியில் ரவி என்பவர் சாமியார் மடம் அமைத்து 10 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார்.மடம் அருகில் ரோட்டின் ஓரமாக 7 அடியில் தண்ணீர் தொட்டி அமைத்து அதற்குள் ஒரு ஆமையை வளர்க்கிறார். ரூபாய் நாணயங்கள் போட்டு வைத்துள்ளார். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகம் நடத்தி வருகிறார்.ஹரிகேஷ் வசிக்கும் வீட்டின் எதிரில் சாமியார் மடம் உள்ளது. ஹரிகேஷ் திடீர் என்று காணாமல் போனான்.
சாமியார் மடத்தின் வெளியே தண்ணீர் தொட்டி கீற்றுச் கொட்டையால் மூடப்பட்டிருந்ததை திறந்து பார்த்தபோது அங்கு ஹரிகேஷ் நீரில் மூழ்கி பிணமாக கிடந்தான்.தண்ணீர் தொட்டி கீற்றுக் கொட்டகையால் மூடப்பட்டிருந்ததாலும், அங்கு நாணயங்கள், ஆமை கிடந்ததாலும் சாமியார் ரவி மீது பொதுமக்களுக்கு சந்தேகத்தை எற்படுத்தியது.நேற்று முன்தினம் இரவு பவுர்ணமி, சந்திர கிரகணம் என்பதால் சாமியார் ரவி சிறப்பு யாகம் நடத்த உள்ளதாக சிலரிடம் தெரிவித்துள்ளார்.இதனால் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாமியார் மடத்துக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.யாக குண்டம், பூஜை அறையையும் சூறையாடினர். சாமியார் ரவியை தாக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓபிஎஸ்.,க்கு எதிரான போராட்டம் நிறுத்தி வைப்பு




தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதி மக்கள், ஓ.பி.எஸ்.,க்கு சொந்தமான கிணற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று, எஸ்பி முன்னிலையில், அப்பகுதி மக்களும், ஓபிஎஸ் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கிணற்றை ஒப்படைப்பது தொடர்பாக 2 நாள் அவகாசம் ஒ.பி.எஸ்.,தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்று, அப்பகுதி மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.


எடப்பாடி மவுனம் காப்பது ஏன்? - ஓ.பி.எஸ்.அணி மூத்த தலைவர்

எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் அணி தலைவர்கள் கேள்வி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியையும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியையும் இணைக்க கடந்த சில தினங்களாக தீவிர பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இரு அணிகள் இணைப்பு வி‌ஷயத்தில் ஏன் முட்டுக்கட்டை நீடிக்கிறது என்று ஓ.பி.எஸ். அணி தலைவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர்கள் தங்கள் தரப்பில் தெளிவாக இருப்பதாகவும், இனி முடிவு எடுக்க வேண்டியது எடப்பாடி பழனிசாமி தான் என்றும் கூறினார்கள். ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-அ.தி.மு.க. ஆட்சி மற்றும் கட்சி விவகாரங்களில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தலையிடுவதை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சி செய்து வெளியேறினார். ஆனால் இந்த வி‌ஷயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனமாக இருக்கிறார்.
டி.டி.வி. தினகரன் புதிய நிர்வாகிகள் அறிவித்து 5 நாட்களாகி விட்டது. இன்னமும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலவில்லை. அவரது இந்த மவுனம், அவரது பலவீனத்தையே காட்டுகிறது.
இவ்வாறு அந்த மூத்த தலைவர் கூறினார்.


ராஜீவ் கொலை - விடுதலை மனு தள்ளிவைப்பு

ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை கேட்டு மனு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் ராபட் பயாஸ், ஜெயகுமார். இவர்கள் இருவரும் சென்னை ஐகோர்ட்டில், 2011-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதியுடன், நாங்கள் சிறையில் இருந்த காலம் 20 ஆண்டுகள் கழிந்து விட்டது. ஆனால் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், நல்லொழுக்கத்தின் அடிப்படையில், 14 ஆண்டுகளில் முன்கூட்டியே விடுதலை செய்வது வழக்கம். ஆனால், அரசு எங்களை மட்டும் 20 ஆண்டுகள் கடந்த பின்னரும், விடுவிக்காமல் உள்ளது. எனவே, எங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



அகஸ்தியர் அருவி தூய்மை - கலெக்டருக்கு உத்தரவு


பாபநாசம் அகஸ்தியர் அருவி தூய்மை படுத்த கோரிய மனு குறித்து பதில் அளிக்க நெல்லைமாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கணேஷ் பெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கின் மீது மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அகஸ்தியர் அருவியில் குப்பை கழிவுகள் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பதில் அளிக்க தமிழக சுற்றுலாத்துறை செயலர் ,மற்றும் நெல்லைமாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


சொத்துவரி விண்ணப்ப கட்டணம் ரூ.1000-ஆக உயர்வு

காஞ்சீபுரம் நகராட்சியில் சொத்துவரி விண்ணப்ப கட்டணம் ரூ.1000-ஆக உயர்வு


காஞ்சீபுரம் நகராட்சி 51 வார்டுகளை கொண்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால் கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகளால் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நகராட்சியின் சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சொத்துவரி விண்ணப்பம் 10 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம் 2 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், குடிநீர் இணைப்பு விண்ணப்பம் 10 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் இலவசமாக வழங்கப்பட்டு வந்த புதைவடிகால் இணைப்பு விண்ணப்பம் தற்போது 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதையடுத்து காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் ஏராளமான காங்கிரசார் நகராட்சி நிர்வாகம் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் நகராட்சி சைவை மையத்தில் எந்தவித முன்னறிவிப்பு செய்யாமலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாமலும், விண்ணப்ப படிவங்களின் விலை பலமடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வினை கைவிட வேண்டும். மேலும் பாதாள சாக்கடை வரியினை 2012ம் ஆண்டிலிருந்து வரிஉயர்வு செய்யப்படுவதாக கம்யூட்டரில் தனி அதிகாரி உத்தரவின்பேரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.முன்பு அரைஆண்டிற்கு செலுத்தி வந்த தொகையை தற்போது ஒரே மாதத்திற்கே செலுத்த வேண்டியுள்ளது. நகராட்சி சேவை மையத்திற்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கு எந்தவிதமான வரிபாக்கி இல்லை என கூறியும் அங்குள்ள ஊழியர்கள் 2012-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை உயர்த்தப்பட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.முன் அறிவிப்பு இல்லாமல் ஏன் வரி உயர்வு செய்தீர்கள் என பொதுமக்கள் கேட்டால் தனி அதிகாரிகை போய் கேளுங்கள் என்று கூறுகின்றனர்.இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகின்றனர். மேலும் பெரிய வணிக நிறுவனங்களின் கட்டிட உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பாதாள சாக்கடை வரியினை குறைவாக நிர்ணயிக்கின்றனர். மக்கள் செலுத்தும் சொத்துவரி, தொழில்வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் குழாய் வரிகள் மூலமாக நகராட்யால் குப்பை அகற்றுதல் தெரு விளக்கு மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறவேண்டிய நிலையில் தற்போது வீடுகளில் குப்பை எடுக்கவும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.சாலை ஓரங்கள் மற்றும் தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்பவர்களிடமும், தலையில் கூடைவைத்து தெருதெருவாக பழங்கள் கீரைகள் விற்பனை செய்பவர்களிடமும் தற்காலிக கடை வாடகை ரசீது என்ற பெயரில் 25 முதல் 100 ரூபாய் வரை நகராட்சி ஊழியர்கள் கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.
எனவே கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்வதை கைவிட வேண்டும். மேலும் நகராட்சியில் வருவாய்பிரிவு, பொறியாளர் பிரிவு, நகர்அமைப்பு பிரிவு, சுகாதார பிரிவு ஆகிய பிரிவிகளில் பொதுமக்கள் அளிக்ககும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் புரோக்கர்களை நியமித்து பொதுமக்களிடம் பணத்தினை எதிர்பார்க்கின்றனர்.விண்ணப்பட கட்டண உயர்வு மற்றும் நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

கவுந்தப்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி அப்பநாய்க்கனூர் கிராமத்தில் வசிப்பவர் இளையராஜா தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 21) கூலி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.இவர்களுக்கு மூன்று வயதில் தீபக் என்ற ஆண்குழந்தை உள்ளது.கடந்த 31ம்தேதி திங்கட்கிழமை மாதேஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கவுந்தப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ரத்தபரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் என மருத்துவர் கூறினார்.மூன்று நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய மாதேஸ்வரிக்கு மீண்டும் காய்ச்சல் திரும்பியது முன்பு சிகிச்சை பெற்ற மருத்துவரிடம் சென்றார்.பிறகு சிகிச்சை பலனின்றி மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெள்ளி, சனி, இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாதேஸ்வரி உடல்நிலை மேலும் மோசமானதால் கோவை தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று காலை மருத்துவமனையில் இறந்தார்.மர்ம காய்ச்சலுக்கு தினமும் பலர் பலியாகி வருகிறார்கள். ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஒரே நாளில் 49 பேர் சிறைப்பிடிப்பு சம்பவம்: புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியது.இதில் பாலமுருகன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்தார். அதேபோல் ரோந்து கப்பலில் வந்த கடற்படை வீரர் விஜயசிங்கா என்பவரும் கடலில் விழுந்துள்ளார். உடனே பாலமுருகனை கடற்படை வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து சென்றனர். அப்போது மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதற்கிடையே கடலில் விழுந்த கடற்படை வீரர் விஜயசிங்காவை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை மீனவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளதாக நினைத்து 12 விசைப் படகுகளுடன் 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைதானார்கள்.ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டும் 41 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான மீனவர்கள் அனைவரும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி சபே‌ஷன் வீட்டில் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். மீனவர்களை வருகிற 22-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணல் மேல்குடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக படகுகள் அனைத்து மீன்பிடி துறை முகங்கள் மற்றும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர். 


இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே உள்ள நமச்சிவாயபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் வனிதா (20). மயிலாடுதுறையில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.திருவிடை மருதூர் அருகே உள்ள மேல செம்மங்குடியை சேர்ந்த கேசவராஜ் மகன் பாட்ஷா என்கிற ராஜீவ்காந்தி (22). இவரும் வனிதாவும் படிக்கும் போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி தூத்துக்குடியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்து இருந்தார். அவர் வனிதாவை தொடர்பு கொண்டு திருமண ஆசை வார்த்தை கூறி மாங்குடி வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்தாக கூறப்படுகிறது.இதில் பாதிக்கப்பட்ட வனிதா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து வாலிபர் ராஜீவ்காந்தியை கைது செய்தார்.


காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: ஈரோடு மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த நிலையில் குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து நேற்று முதல் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் ஈரோடு மாவட்ட எல்லையான நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை வழியாக இருகரைகளையும் தொட்டபடி வருகிறது.இதையொட்டி ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றங் கரையோரப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைவிரித்திருப்பார்கள். பாய்ந்து வரும் தண்ணீரால் இந்த வலைகள் இழுத்து செல்லப்படும்.மேலும் கரையோரத்தில் பொதுமக்கள் குளிப்பார்கள். தண்ணீர் அதிகமாக வரும்போது வெள்ளத்தில் மக்கள் சிக்கக்கூடும். எனவே பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.நேற்று இரவு பொதுப் பணித்துறை சார்பில் ஊழியர்கள் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பகுதிகளுக்கு சென்றனர். அவர்கள் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தனர்.



கட்சியும், ஆட்சியும் எங்களிடம் தான் உள்ளது

Image result for cm edappadi images



விழுப்புரத்தில் நடைபெற்ற  எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது: டெங்கு காய்ச்சலை சமாளிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கட்சியும், ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளது, மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.  பொதுச்செயலாளர் பதவி குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளதால் கருத்து தெரிவிக்க முடியாது. பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது ஜனநாயக உரிமை. தமிழக அரசின் முதன்மையான சவாலே குடிநீர் பிரச்சினை தான், இதனை சமாளிக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தொண்டர்கள் ஒரேஅணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். விழுப்புரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும். விழுப்புரத்தில் ரூ.198 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.


மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களை நிரப்ப ஐகோர்ட் தடை

மாற்றுத்திறனாளிகளுக்கான, 4% இடங்களை, நிரப்ப, ஐகோர்ட் தடை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடங்களை நிரப்ப தடை விதித்தும் அந்த இடங்களை காலியாக வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்



விழுப்புரம் கண்டமானடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
காட்டில் நரி செய்யும் சூழ்ச்சி போன்று நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கின்றனர். எனவே, கட்சி தொண்டர்கள் ஒரே அணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டும். அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. சூழ்ச்சி ஒருபோதும் வெற்றி பெறாது.மத்திய அரசுடன் இணக்கமாக நாம் செயல்படுவதாக விமர்சனம் செய்கின்றனர். மக்களின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். விழுப்புரத்தில் ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.


தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்



தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்தப் போக்கு மாறவேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட்டோரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 1950 ஆகஸ்டு 10-ம் நாள் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டனர். எனவே,அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க அந்த நாளை தலித் கிறிஸ்தவர்கள் கறுப்பு நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். அவர்தம் அறப் போராட்டம் வெற்றிபெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.இந்து மதத்தைப் பின்பற்றுவோரைத்தான் எஸ்.சி. பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் ஆணையில் 1956 ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும் எஸ்.சி. பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யப்பட்டது. அடுத்து 1990 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தால் பவுத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்.சி. பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் மட்டும் எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றனர்.மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 'ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்' தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட மத்திய அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்.சி. பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இந்த அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 13 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் இந்து மதத்தின் சாதி கோட்பாடு எல்லா மதங்களையும் தொற்றிப் பாழாக்கிவிட்டதால் எந்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த உண்மை ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும்கூட தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்தப் போக்கு மாறவேண்டும்.சீக்கியம், பவுத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறிஸ்தவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காட்டப்படவேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது என மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.இந்நிலையில், ஆகஸ்டு 10 ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கும் தலித் கிறிஸ்தவர்களின் அறப் போராட்டம் வெல்க என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


ஒன்று திரண்டு போராட வேண்டும்

பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும்

பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது:–கடவாச்சேரி முதல் தில்லைநாயகபுரம் மற்றும் புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைவது குறித்து கருத்து கேட்டு வருகிறேன். கடலூர், நாகை மாவட்டத்தில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் அளவில் விளைநிலங்களை கையகப்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சுமார் ரூ.92 ஆயிரம் கோடி முதலீடு செய்யவும், அதில் முதற்கட்டமாக ரூ.1,146 கோடி ஒதுக்கீடு செய்து ரெயில் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.வாழ்வாதாரத்தை பாதுகாக்க சாதி, மதம் பார்க்காமல் நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இந்த திட்டம் செயல்பட்டால் நெய்வேலி போன்று இந்த பகுதி மாறிவிடும். இப்பகுதியில் 1,000 குடும்பத்தினர் காலி செய்யப்படுவார்கள். பெட்ரோலிய ரசாயன பூங்கா அமைக்கபட்டால் விளைநிலங்கள் மட்டுமின்றி குடிநீரும் பாதிக்கப்படும்.இந்த பகுதியில் பூமிக்கு அடியில் ஏராளமான தாது பொருட்கள் உள்ளன. இதை எடுக்க மத்திய, மாநில அரசுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளது. வேளாண் மண்டலமாக நமது டெல்டா பூமியை வேதி மண்டலமாக உருவாக்கப்படப்போகிறது. பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைந்தால் இயற்கை சூழ்நிலையில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மைய சதுப்புநிலக் காடுகள் முற்றிலும் அழிந்து போகும். இந்த திட்டத்தை நாம் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. நாம் ஒன்றுபட்டு, போராடி, இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.