மக்களுக்கு மிகச் சிறப்பான முறையில், தொடர்ந்து மருத்துவ சேவை வழங்கும் டாக்டர் களுக்கு ‘தம்பா-லிம்ரா’ விருது கள் வழங்கப்பட்டன.இந்த விழாவில், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். கவுரவ விருந்தினராக எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து பங்கேற்று விருது பெற்ற டாக்டர்களையும், விருது வழங்கும் மருத்துவர் சங்கம் மற்றும் லிம்ரா நிறுவனத்தையும் வாழ்த்தினார்.தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் ஆண்டுதோறும், மக்களுக்கு மருத்துவ சேவையை சிறப்பாக மேற்கொண்டு வரும் டாக்டர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. விருது வழங்கும் விழாவை, வெளிநாட்டில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களை வழி நடத்தும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் சென்ற ஆண்டு முதல், இந்த சங்கத்துடன் இணைந்து நடத்தி வருகிறது. “தம்பா-லிம்ரா விருதுகள்” (TAMPA-LIMRA) என்ற பெயரில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.தங்களுடைய பணிப் பொறுப்பையும் கடந்து, நம் சமுதாய மக்களுக்கு, சிறந்த மருத்துவ சேவையைத் தொடர்ந்து வழங்கும் மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்கப்படுகிறது. இது போன்ற விருதுகள் வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்ற இது ஊக்க சக்தியாக உள்ளது. மேலும் இந்த விழாவில் லிம்ரா நிறுவனம் நடத்தும் MCI Screening test பயிற்சி வகுப்பில் பயின்று தேர்ச்சி பெற்ற இளம் மருத்துவர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.அரிய சேவையை வழங்கி வரும் மருத்துவர்களுக்கு விருது வழங்குவதில் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்துடன் இணைந்து செயல்படுவதில் பெருமை கொள்வதாக லிம்ரா ஓவர்சீஸ் கல்வி நிறுவன இயக்குநர் முகமது கனி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment