காஞ்சீபுரம் நகராட்சி 51 வார்டுகளை கொண்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால் கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகளால் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நகராட்சியின் சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சொத்துவரி விண்ணப்பம் 10 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம் 2 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், குடிநீர் இணைப்பு விண்ணப்பம் 10 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் இலவசமாக வழங்கப்பட்டு வந்த புதைவடிகால் இணைப்பு விண்ணப்பம் தற்போது 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதையடுத்து காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் ஏராளமான காங்கிரசார் நகராட்சி நிர்வாகம் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் நகராட்சி சைவை மையத்தில் எந்தவித முன்னறிவிப்பு செய்யாமலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாமலும், விண்ணப்ப படிவங்களின் விலை பலமடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வினை கைவிட வேண்டும். மேலும் பாதாள சாக்கடை வரியினை 2012ம் ஆண்டிலிருந்து வரிஉயர்வு செய்யப்படுவதாக கம்யூட்டரில் தனி அதிகாரி உத்தரவின்பேரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.முன்பு அரைஆண்டிற்கு செலுத்தி வந்த தொகையை தற்போது ஒரே மாதத்திற்கே செலுத்த வேண்டியுள்ளது. நகராட்சி சேவை மையத்திற்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கு எந்தவிதமான வரிபாக்கி இல்லை என கூறியும் அங்குள்ள ஊழியர்கள் 2012-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை உயர்த்தப்பட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.முன் அறிவிப்பு இல்லாமல் ஏன் வரி உயர்வு செய்தீர்கள் என பொதுமக்கள் கேட்டால் தனி அதிகாரிகை போய் கேளுங்கள் என்று கூறுகின்றனர்.இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகின்றனர். மேலும் பெரிய வணிக நிறுவனங்களின் கட்டிட உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பாதாள சாக்கடை வரியினை குறைவாக நிர்ணயிக்கின்றனர். மக்கள் செலுத்தும் சொத்துவரி, தொழில்வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் குழாய் வரிகள் மூலமாக நகராட்யால் குப்பை அகற்றுதல் தெரு விளக்கு மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறவேண்டிய நிலையில் தற்போது வீடுகளில் குப்பை எடுக்கவும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.சாலை ஓரங்கள் மற்றும் தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்பவர்களிடமும், தலையில் கூடைவைத்து தெருதெருவாக பழங்கள் கீரைகள் விற்பனை செய்பவர்களிடமும் தற்காலிக கடை வாடகை ரசீது என்ற பெயரில் 25 முதல் 100 ரூபாய் வரை நகராட்சி ஊழியர்கள் கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.
எனவே கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்வதை கைவிட வேண்டும். மேலும் நகராட்சியில் வருவாய்பிரிவு, பொறியாளர் பிரிவு, நகர்அமைப்பு பிரிவு, சுகாதார பிரிவு ஆகிய பிரிவிகளில் பொதுமக்கள் அளிக்ககும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் புரோக்கர்களை நியமித்து பொதுமக்களிடம் பணத்தினை எதிர்பார்க்கின்றனர்.விண்ணப்பட கட்டண உயர்வு மற்றும் நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment