முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியையும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியையும் இணைக்க கடந்த சில தினங்களாக தீவிர பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இரு அணிகள் இணைப்பு விஷயத்தில் ஏன் முட்டுக்கட்டை நீடிக்கிறது என்று ஓ.பி.எஸ். அணி தலைவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர்கள் தங்கள் தரப்பில் தெளிவாக இருப்பதாகவும், இனி முடிவு எடுக்க வேண்டியது எடப்பாடி பழனிசாமி தான் என்றும் கூறினார்கள். ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-அ.தி.மு.க. ஆட்சி மற்றும் கட்சி விவகாரங்களில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தலையிடுவதை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சி செய்து வெளியேறினார். ஆனால் இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனமாக இருக்கிறார்.
டி.டி.வி. தினகரன் புதிய நிர்வாகிகள் அறிவித்து 5 நாட்களாகி விட்டது. இன்னமும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலவில்லை. அவரது இந்த மவுனம், அவரது பலவீனத்தையே காட்டுகிறது.
இவ்வாறு அந்த மூத்த தலைவர் கூறினார்.
No comments:
Post a Comment