Wednesday 9 August 2017

ராஜீவ் கொலை - விடுதலை மனு தள்ளிவைப்பு

ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை கேட்டு மனு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் ராபட் பயாஸ், ஜெயகுமார். இவர்கள் இருவரும் சென்னை ஐகோர்ட்டில், 2011-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதியுடன், நாங்கள் சிறையில் இருந்த காலம் 20 ஆண்டுகள் கழிந்து விட்டது. ஆனால் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், நல்லொழுக்கத்தின் அடிப்படையில், 14 ஆண்டுகளில் முன்கூட்டியே விடுதலை செய்வது வழக்கம். ஆனால், அரசு எங்களை மட்டும் 20 ஆண்டுகள் கடந்த பின்னரும், விடுவிக்காமல் உள்ளது. எனவே, எங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



No comments:

Post a Comment