தமிழகத்தைப் பொறுத்தவரை குடிநீர் கேன்கள் விற்பனை மிகப் பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 1,379 கேன் குடிநீர் நிறுவனங்கள் பிஐஎஸ் உரிமம் பெற்றுள்ளன. மற்ற மாநிலங் களைவிட இது அதிகமாகும். இவை தவிர, முறையாக உரிமம் பெறா மலும் கேன் குடிநீர் நிறுவனங்கள் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.அவ்வாறு வரும் புகார்களை மாநில உணவு பாதுகாப்புத் துறை, இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் 743 கேன் குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகள் சோதனைக்காக பெறப் பட்டுள்ளன. அவற்றில் 697 மாதிரி களை ஆய்வு செய்ததில் 224 மாதிரி கள் தரமற்றவை என கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதில், 131 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு, 33 வழக்குகளில் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. 40 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அபராத தொகையாக ரூ.7.05 லட்சம் வசூலிக் கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்ய வேண்டுமானால், இந்திய தர நிர்ணய அமைவனத்திடமிருந்து ஐஎஸ்ஐ தரச் சான்று பெறுவது கட்டாயமாகும். பின்னர், ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங் கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலான கேன் குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரைத் தான் முக்கிய நீர் ஆதாரமாகக் கொண்டுள்ளன. எனவே, அள வுக்கு அதிகமான காப்பர், இரும்பு, அலுமினியம், குளோரைடு போன்ற வற்றால் தரம் பாதிக்கப்பட்ட குடி நீரைப் பருகினால், வாந்தி, உயர் ரத்த அழுத்தம், முடக்குவாதம், இதயம், கிட்னி, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.மேலும், நச்சுப் பொருட்களான கேட்மியம், பாதரசம் போன்றவை குடிநீரில் கலந்திருப்பின் அவை மூளை, நுரையீரல், நரம்பு மண்ட லத்தை பாதிக்கும் அபாயம் உள் ளது. எனவே, ஐஎஸ்ஐ முத்திரை யுள்ள தரமான குடிநீரைப் பருகு வது நல்லது.தாங்கள் வாங்கும் பொருட்களில் ஐஎஸ்ஐ முத்திரையை உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தும் நிறுவனங்கள், சந்தேகப்படும் குடிநீர் கேன் நிறுவனங்கள் மீதான புகார்களை 044-22541442, 22542519, 22541216 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோ, sro@bis.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.சென்னை மாவட்ட உணவு பாது காப்புத் துறை அதிகாரி கதிரவன் கூறும்போது, “உரிமம் பெறாத கேன் குடிநீர் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மக்களிடையேயும் போதிய விழிப்புணர்வு அவசியம். குடிநீர் கேன்களை வாங்கும்போது அவை நன்றாக சீல் செய்யப்பட்டு கசிவின்றி இருக்கிறதா, தயாரிப்பு தேதி, பேட்ச் எண், ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும், அழுக்கு படிந்த நிலை யில் உள்ள கேன்களை வாடிக்கை யாளர்கள் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. தரமற்ற குடிநீரை விற்பனை செய்வது தெரியவந்தால் 9444042322 என்ற எண்ணில் மாநில உணவு பாதுகாப்புத் துறையைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
No comments:
Post a Comment