சேலம் கட்சராயன் ஏரியை பார்வையிட சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.சேலத்தில் திமுகவினர் தூர்வாரிய கட்சராயன் ஏரிவை பார்வையிட சென்ற ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, கட்சராயன் ஏரிவை ஸ்டாலின் பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்தது.
மனுதாரர் சார்பில், திமுகவினர் தூர்வாரிய பகுதிகளை மட்டும் தான் ஸ்டாலின் பார்வையிட உள்ளார் என்றார்.அரசு வழக்கறிஞர் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி கூறுகையில், ஸ்டாலின் கட்சராயன் ஏரிவை பார்வைவிட அனுமதி வழங்கப்படுகிறது. 25 பேருடன் மட்டும் சென்று ஏரியை பார்வையிட வேண்டும். ஏரியை தூர்வாரியது அரசாக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் சென்று பார்வையிடுவதில் என்ன தவறு? சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போலீசார் பார்த்து கொள்வார்கள்.ஏரியை பார்வையிட சென்றஸ்டாலினை மட்டும் தடுத்து நிறுத்தியது ஏன்? அவர் மணலை திருட போகிறார் என்பது உங்களது கணிப்பா? வழக்கிற்கு தேவையற்ற மணல் திருட்டு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்தது ஏன்? ஏரியை பார்வையிடவே கூடாது என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. கட்சராயன் ஏரி தமிழகத்தில் தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்றார்
No comments:
Post a Comment